18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்கள் சார்பில் 72- வது குடியரசு தின விழா..

கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்கள் சார்பில் 72- வது குடியரசு தின விழா..

எழுதியவர்: ஆசிரியர் January 26, 2021, 8:35 pm
கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்கள் சார்பில் 72- வது குடியரசு தின விழா பள்ளி தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராகிம் தலைமையில் நடந்தது. கீழக்கரை தெற்குத்தெரு ஜமாஅத் தலைவர் உமர் அப்துல்காதர் களஞ்சியம் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். கல்வி அபிவிருத்திக் குழுவின் தலைவர் எம்.ஏ. ஹாருன் ரஷீத் மற்றும் பொருளாளர் எம்.எஸ்.எம்  புகாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 9-வது வகுப்பு மாணவி பசீஹா கிராஅத் ஓதினார். பல்வேறு போட்டிகளில்  வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எம்.எம்.கே.அலிபுதீன் பரிசு வழங்கினார்.  இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 9-வது வகுப்பு மாணவி செய்யது ராபியத் யுஸ்ரா வரவேற்று பேசினார்.  ஐந்தாம் வகுப்பு மாணவி அரபா பாத்திமா, இஸ்லாமியா துவக்கப் பள்ளி 10ம் வகுப்பு மாணவி ஆப்ரின் சல்ஹா, இஸ்லாமியா மெட்ரிக், மேல்நிலைப் பள்ளி 12-வது வகுப்பு மாணவி ஆய்ஷத் ருக்ஷானா ஆகியோர் பார்வையாளர்கள் பாராட்டும் வகையில் குடியரசு தின உரையை பேசி அசத்தினர்.
இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை நவ்சாத் பேகம் நன்றி கூறினார். கல்வி அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள், பள்ளி முதல்வர், தலைமையாசிரியர்கள், ஆசிரிய, ஆசிரியைகள்,அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள்,பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அனைவரும் அரசின் வழிகாட்டுதல் படி முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி இருந்தனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!