17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் 72வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இரத்ததான முகாம்…..

கீழக்கரையில் 72வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இரத்ததான முகாம்…..

எழுதியவர்: ஆசிரியர் January 26, 2021, 3:27 pm

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(தெற்கு)மாவட்டம் கீழக்கரை தெற்குகிளை சார்பில் 72வது இந்திய குடியரசு தினத்தன்று கீழக்கரை அரசு மருத்துவமனையில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் A.அய்யூப்கான் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமை கீழக்கரை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.K.முருகேசன்  துவங்கிவைத்தார். மாவட்டசெயலாளர் ஆரிப்கான் மற்றும் கீழக்கரை அனைத்துகிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இந்த முகாமில் பிறமத சகோதர,சகோதரிகள் உள்பட 45 நபர்கள் தங்களது இரத்தத்தை தானமாக வழங்கினார்கள். இந்த சிறப்பான முகாமின் ஏற்பாடுகளை தெற்குகிளை துணைத்தலைவர் பதுருசமான் மற்றும் துணைச்செயலாளர் ஷிகாப் ஆகியோர் செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!