17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சுரண்டை புனித அந்தோணியார் திருத்தலத்தில் தேர்பவனி திருவிழா…

சுரண்டை புனித அந்தோணியார் திருத்தலத்தில் தேர்பவனி திருவிழா…

எழுதியவர்: mohan January 26, 2021, 10:58 am

சுரண்டை புனித அந்தோணியார் திருத்தலத்தில் தேர்பவனி திருவிழா சிறப்பாக நடந்தது. தென்காசி மாவட்டம் சுரண்டையில் புனித அந்தோணியார் திருத்தல திருவிழா கடந்த 12ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் மாலையில் ஜெபமாலையும், திருவிழா திருப்பலியும்,  மறையுரையும், நற்கருணை ஆசீரும் நடைபெற்றன. மறை மாவட்டத்தைச் சேர்ந்த பங்கு தந்தையர் தினமும் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கினர்.ஞாயிற்றுக்கிழமை மாலை தேர் பவனி விழா நடந்தது. புனித அந்தோணியார் திருத்தேரில், அனைத்து தெருக்களிலும் வலம் வந்து மக்களுக்கு இறை ஆசீர் வழங்கினார்.முன்னதாக தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார் கலந்து கொண்டு தேர் பவனியை தொடங்கி வைத்தார். மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவ பத்மநாபன் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை லாரன்ஸ் தலைமையில் அருட் சகோதரிகள் ஊர் பொறுப்பாளர்கள் மற்றும் இறைமக்கள் செய்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!