17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » லோன் தர மறுத்த கூட்டுறவு வங்கி எழுத்தர் கை உடைப்பு .

லோன் தர மறுத்த கூட்டுறவு வங்கி எழுத்தர் கை உடைப்பு .

எழுதியவர்: mohan January 26, 2021, 10:18 am

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வங்கித் தலைவருக்கு லோன் தர மறுத்த வங்கி எழுத்தரை தாக்கி கையை உடைத்த வங்கித் தலைவர் தலைமறைவானார்.திருமங்கலம் பகுதி சிந்துபட்டி அருகே உள்ள திடியன் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் சண்முகம் (வயது 54) என்பவர் முதுநிலை எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் வங்கியின் தலைவர் பால்ராஜ் மற்றும் அவரது மகன் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் பினாமி பெயரில் தங்களுக்கு லோன் தர கூறியுள்ளனர். இதற்கு சண்முகம் மறுத்ததால் இருவரும் அவரை தாக்கியதில் அவரது மணிக்கட்டு எலும்பு முறிந்து போனது.இதுகுறித்து சிந்துபட்டி போலீஸாரிடம் சண்முகம் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!