18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் 72 வது குடியரசு தின விழா கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

நிலக்கோட்டையில் 72 வது குடியரசு தின விழா கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

எழுதியவர்: mohan January 26, 2021, 10:03 am

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை புதிய தாலுகா அலுவலகம் முன்பு தாசில்தார் யூஜின் தலைமையில் 72 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். அதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை மகளிர் சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள பெண் கைதிகளுக்கு இனிப்புகள் வழங்கி குடியரசு தினத்தை கொண்டாடினார்கள். இதேபோன்று நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உள்ள தேசிய கொடியை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ரெஜினா நாயகம் தலைமை தாங்கி 72 வது குடியரசு தினத்தை முன்னிட்டுதேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கியும், அதனைத் தொடர்ந்து ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் தூய்மை காவலர்கள் ஆக பணிபுரிந்து சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகளும் பரிசுகளும் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் யாகப்பன், ஒன்றிய ஆணையாளர் லாரன்ஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று நிலக்கோட்டை எச்.என்.யூ.பி.ஆர். பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைவர் சுசீந்திரன் தலைமை தாங்கி 72 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். நிலக்கோட்டை கே.சி.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிர்வாக இயக்குனர் அண்ணாமலை தலைமை தாங்கி 72 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்து போதும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். நிலக்கோட்டை இந்திய தேசிய காங்கிரஸ் வட்டாரத் தலைவர் கோகுல்நாத் தலைமையில் முன்னாள் சுதந்திர போராட்ட வீரர்கள் நினைவு கம்பங்களில்72 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்றி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். இதுபோன்ற நிலக்கோட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு உள்ள கொடிக் கம்பத்தில் 72 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியை நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) கலையரசி தலைமையில் தேசியக்கொடியை சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!