17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரம் மாவட்ட கேரம் போட்டி:வென்றவர்களுக்கு பாராட்டு.

ராமநாதபுரம் மாவட்ட கேரம் போட்டி:வென்றவர்களுக்கு பாராட்டு.

எழுதியவர்: mohan January 26, 2021, 9:42 am

இராமநாதபுரம் மாவட்ட கேரம் விளையாட்டு சங்கம், அச்சீவர்ஸ் அகாடமி சார்பில் 10 ,14 ,17 வயதிற்குட்பட்டோர் , 17 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவு ஆடவர், மகளிர் ஒற்றையர், இரட்டையருக்கான மாவட்ட அளவிலான கேரம் போட்டி ஜனவரி 23, 24 ஆம் தேதிகளில் நடந்தது. மாவட்ட கேரம் சங்க காப்பாளர் மார்னிங் ஸ்டார் கே.செந்தில்குமார் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். மாணவ, மாணவியா் ஆன்லைன் விளையாட்டுகளை தவித்து நம் பாரம்பரிய விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும் என இன்னர்வீல் சங்க முன்னாள் தலைவர் கவிதா செந்தில்குமார் பேசினார். இரண்டு நாள் போட்டியில் 65க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர். இதில் 10 வயது பிரிவு ஆடவர் ஒற்றையர் ஆட்டம்- ஜாஅஸ்வா, மகளிர் ஒற்றையர் ஆட்டம்- ஜெ.சிவ நிலா,ஆடவர் இரட்டையர் ஆட்டம்- ஜா. அஸ்வா மற்றும் எம்.அஹமத் ரஹ்மத்துல்லாஹ், மகளிர் இரட்டையர் ஆட்டம்- கே.கிரிஷா மற்றும் என்.ஆலிய சனா, 14 வயது பிரிவு ஆடவர் ஒற்றையர் ஆட்டம்- பி.துஹின் அஸ்வந்த், மகளிர் ஒற்றையர் ஆட்டம்- எம்.ரோஹித்ய ஸ்ரீ, ஆடவர் இரட்டையர் ஆட்டம்- பி. தருண் வலம்புரிவேல் மற்றும் பி.துஹின் அஸ்வந்த், மகளிர் இரட்டையர் ஆட்டம்- ஹரிணி மித்ரா மற்றும் ரோஹித்ய ஸ்ரீ, 17 வயது பிரிவு ஆடவர் ஒற்றையர் ஆட்டம்- ஜா.அஸ்வா, மகளிர் ஒற்றையர் ஆட்டம்- கே.ஹர்சினி வசுந்ரா, ஆடவர் இரட்டையர் ஆட்டம்- ஜா.அஸ்வா மற்றும் ஜெ.விஜித், மகளிர் இரட்டையர் ஆட்டம்- கே.ஹர்சினி வசுந்ரா மற்றும் எம்.உமா பாரதி, பொது பிரிவு ஆண்கள் ஒற்றையர் ஆட்டம்- எம்.காமேஷ், ஆண்கள் இரட்டையர் ஆட்டம்- எம்.காமேஷ் மற்றும் என்.விஷ்ணு பிரியன், பெண்கள் ஒற்றையர் ஆட்டம்- எஸ்.பவி ஸ்ரீ, பெண்கள் இரட்டையர் ஆட்டம்- எஸ்.பவி ஸ்ரீ மற்றும் எம்.ஹரி பிரியா ஆகியோர் முதலிடம் பிடித்தனர். போட்டியில் வென்றோருக்கு கோப்பைகள், பதக்கங்கள், சான்றிதழ்களை தேசிய தலைமை நடுவர் மகேஷ் வழங்கினார். கேரம் பயிற்றுநர் ஆனந்த குமார், ராமநாதபுரம் மாவட்ட கேரம் கழக துணை செயலர் மகேஷ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் ஜெகன்விஜய் நன்றி கூறினா்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!