18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பஸ்ஸுக்காக காத்திருந்த பயனி மயங்கி விழுந்து பலி

மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பஸ்ஸுக்காக காத்திருந்த பயனி மயங்கி விழுந்து பலி

எழுதியவர்: mohan January 25, 2021, 12:21 pm

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பஸ்ஸுக்காக காத்திருந்த பயணி மயங்கி விழுந்து பலியானார்.சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் குளவயல் ஊரைச் சேர்ந்தவர் சேகர் 44. இவர் கடந்த 5 ஆண்டுகளாக கேரளாவில் வேலை பார்த்து வருகிறார். மதுரைக்கு வந்தவர் சேகர் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது .இதனால் மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார் .அவரது சாவு குறித்து மனைவி கொடுத்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!