17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அய்யனார் கோவில் பகுதியில் சுற்றுலா துறை சார்பில் பொங்கல் விழா மாவட்ட ஆட்சியர் தலைமையில் கொண்டாடப்பட்டது .

அய்யனார் கோவில் பகுதியில் சுற்றுலா துறை சார்பில் பொங்கல் விழா மாவட்ட ஆட்சியர் தலைமையில் கொண்டாடப்பட்டது .

எழுதியவர்: mohan January 25, 2021, 12:03 pm

இராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான அய்யனார் கோவில் பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் கொண்டாட்டம் ஆனது இன்று கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கண்ணன் மற்றும் வருவாய் அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். பழங்குடியின மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பறை இசை மற்றும் பரத நாட்டியம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியின் முடிவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பரிசுகளை வழங்கினார். மேலும் பழங்குடியின மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், ஆடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!