18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நேதாஜி பிறந்த நாள் விழா:

நேதாஜி பிறந்த நாள் விழா:

எழுதியவர்: mohan January 24, 2021, 10:56 am

 நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஏபிவிபிமதுரை கிளை சார்பாக மதுரை முனிச்சாலை யிலிருந்து நேதாஜி ரோடு நேதாஜி சிலை வரை 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் வாகனப் பேரணி நடைபெற்றது. மேலும், ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் 1வது தெருவில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிகளை தேசிய செயற்குழு உறுப்பினர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். மாநில இணைச் செயலாளர் திரு கோபி மாநில செயற்குழு உறுப்பினர் செல்வி பாரதி மற்றும் மாநகரச் செயலாளர் வெங்கட்ராஜ் ஏபிவிபி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியினை நடத்தினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!