18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராஜபாளையத்தில் 32-வது சாலை பாதுகாப்பு மாதம் முன்னிட்டு பெண் காவலர்கள் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணி.

இராஜபாளையத்தில் 32-வது சாலை பாதுகாப்பு மாதம் முன்னிட்டு பெண் காவலர்கள் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணி.

எழுதியவர்: mohan January 22, 2021, 11:40 am

விருதுநகர்மாவட்டம் இராஜபாளையத்தில் போக்குவரத்து காவலர்கள் மற்றும் பெண் காவலர்கள் இணைந்து 32-வது சாலை பாதுகாப்பு மாதம் முன்னிட்டு பெண் காவலர்கள் தலைக்கவசம் அணிந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாதகைகள் அடங்கிய இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இராஜபாளையம் போக்குவரத்து துறை காவல் ஆய்வாளர்கள் லெட்சுமணன், அருள் சங்கர் தலைமையில் சுமார் 50 க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் தென்காசி ரோடு பகுதியிலிருந்து நகரின் முக்கிய வீதி வழியாக பஞ்சு மார்க்கெட் வரை சாலை பாதுகாப்பு குறித்தும் விபத்தில்லா பயணங்கள் குறித்தும் தலைக்கவசத்தின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. மேலும் சீட்பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து காவல் ஆய்வாளர் லட்சுமணன் விளக்க உரையாற்றினார்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!