திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டார அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் மண்மலை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் தஹஜிம் பானு மற்றும் சுமதி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்கி, காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். ஓய்வு பெறும்போது அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் 100-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், வருகிற 29-ந் தேதி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும், வருகிற பிப்ரவரி 5 சென்னையில் நடைபெறும் பெருந்திரள் முறையீடு போராட்டத்திலும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.இதனைத்தொடர்ந்து,கலசபாக்கம் ஓருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் சுமதி தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் செல்வாம்பா முன்னிலை வகித்தனர். இதில் கலசப்பாக்கம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
செங்கத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் .
எழுதியவர்: mohan January 22, 2021, 11:04 am




You must be logged in to post a comment.