17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை பள்ளியில் சைக்கிள்கள் வழங்கும் விழா:

மதுரை பள்ளியில் சைக்கிள்கள் வழங்கும் விழா:

எழுதியவர்: mohan January 21, 2021, 11:29 am

இலவச சைக்கிள் வழங்கும் விழாமதுரை புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. பள்ளி தாளாளர் சேவியர் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ரெக்ஸ் பீட்டர், உதவி தலைமை ஆசிரியர் ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் செல்லூர் ராஜூ 350 மாணவர்களுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கினார். அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில் மனித வாழ்வில் கல்வியே மிகவும் அழகு என்கிறது நாலடியார் பாடல். அதற்கேற்ப தமிழக அரசு பள்ளி மாணவர்களின் கல்வி அறிவை வளர்க்கவும், இடைனில்லாமல் மாணவர்கள் கல்வியை தொடரவும் விலையில்லா லேப்டாப், சீருடை, பாட புத்தகங்கள், நோட்டு, எழுது பொருட்கள், சைக்கிள் போன்றவற்றை வழங்குகிறது. மாணவர்கள் இதனை பயன்படுத்திக் கொண்டு கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்றார். மாவட்ட முதன்மை அலுவலர் சுவாமிநாதன், மாவட்ட கல்வி அலுவலர் வளர்மதி, அ தி.மு.க., மாவட்ட பொருளாளர் ராஜா, மதுரை மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ். பாண்டி, முன்னாள் மேயர் திரவியம், எம்.எல்.ஏ., அண்ணாதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!