17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி – தொடர் மழையால் அறுவடை செய்யமுடியாமல் வரகு பயிர்கள் பாதிப்படைந்து, நிலத்திலேயே முளைத்துள்ளதால் விவசாயிகள் கவலை

உசிலம்பட்டி – தொடர் மழையால் அறுவடை செய்யமுடியாமல் வரகு பயிர்கள் பாதிப்படைந்து, நிலத்திலேயே முளைத்துள்ளதால் விவசாயிகள் கவலை

எழுதியவர்: mohan January 20, 2021, 4:52 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான அயோத்திப்பட்டி, சந்தைப்பட்டி, பாறைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் வரகு பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வந்த நிலையில், 70 நாட்களுக்கு பிறகு வரகு பயிர்கள் அறுவடை செய்ய தயார் நிலையில் இருந்தது. இந்நிலையில் கடந்த 10நாட்களுக்கு மேலாக தொடர் மழை, பனிமூட்டம் காரணமாக வரகு பயிர்கள் பயிரிட்டுள்ள நிலத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வரகு கதிர்கள் அனைத்தும் மழையால் நனைந்து முளைக்கொட்ட தொடங்கியுள்ளது. வரகு பயிர்களுக்கு 1ஏக்கருக்கு 3000ரூபாய் செலவழித்த பணம் கூட கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும்; அறுவடை செய்யாமலிலேயே அழுகிய நிலையில் உள்ளது. இதனால் பாதிப்படைந்துள்ள வரகு பயிர்களுக்கு தமிழக அரசு உhயி நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!