17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு யோகாசனம் செய்தபடி திருக்குறள் எழுதி சாதனை செய்தனர்.

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு யோகாசனம் செய்தபடி திருக்குறள் எழுதி சாதனை செய்தனர்.

எழுதியவர்: mohan January 20, 2021, 10:48 am

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் அசார், சல்மான் சகோதரர்கள்பல்வேறு யோகா சாதனைகள் மூலம் இந்திய அளவில் மற்றும் சர்வதேச அளவில் விருதுகளைப் பெற்றவர்கள்.இவர்கள் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஐயன் திருவள்ளுவரை போற்றும் விதமாக மாணவர்களுக்கு திருக்குறள் எழுதும் போட்டி வைத்தனர்.யோகாசனம் மூலம் திருக்குறள் எழுதும் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் மாணவர்களுக்கு திருவள்ளுவர் விருது மற்றும் ஷீல்டு வழங்கி கௌரவித்தனர்.மேலும் அசார் சல்மான் ஆகியோர் ஆணி பலகை உள்பட கடின யோகாசனம் மூலம் மற்றும் பல்வேறு யோகா ஆசனங்கள் மூலம் திருக்குறள் எழுதி சாதனை படைத்தனர்.கின்னஸ் சாதனைக்காக எடுக்கும் முயற்சியாகவும் தமிழ் மொழியைப் போற்றும் விதமாகவும் சிறப்பாக திருவள்ளூர் தினத்தை கொண்டாடி வருகின்றோம்.வரும் 2022ஆம் ஆண்டு 1330 மாணவர்கள் கலந்து கொள்ளும் மிகப்பெரிய யோகா திருக்குறள் போட்டி நடைபெறும் என கூறினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!