18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பொதுமக்கள் குடும்ப அட்டையை ஒப்படைத்து சாலை மறியல் செய்தனர்.

பொதுமக்கள் குடும்ப அட்டையை ஒப்படைத்து சாலை மறியல் செய்தனர்.

எழுதியவர்: mohan January 20, 2021, 10:01 am

திருப்பரங்குன்றம் அருகே கொம்பாடி கிராமத்தில் நிலையூர் கால்வாயில் தண்ணீர் திறந்துவிட அதிகாரிகள் அலட்சியத்தால் பொதுமக்கள் குடும்ப அட்டையை ஒப்படைத்து வலையன் குளம் ரிங் ரோட்டில் சாலை மறியல் செய்தனர்திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் சௌந்தர்யா முன்னிலையில் மூன்று மணிநேர சமரச கூட்டத்தில் எந்தவித முடிவும் எட் பொதுமக்கள் குடும்ப அட்டை ஒப்படைத்து வலையன்குளம் ரிங் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்திருப்பரங்குன்றம் அருகே கொம்பாடி கிராமத்திற்கு நிலையூர் கால்வாயில் இருந்து தண்ணீர் திறந்து விடாததால் கண்டித்து கிராம மக்கள் குடும்ப அட்டை ஒப்படைப்பு போராட்டம்.மதுரை மாவட்டம் மதுரை தெற்கு தாலுகா திருப்பரங்குன்றம் அருகே கொம்பாடி கிராமம் உள்ளது.இத்த கிராமத்திற்கு நிலையூர் கம்பிக்குடி கால்வாய் மூலம் கிராமத்திற்கான பாசன வசதி பெற தண்ணீர் கோரி பொதுமக்கள் பல்வேறு புகார் மனுக்களை அளித்தனர் .ஆனால் மதுரை மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் கிராம மக்கள் தங்கள் குடும்ப அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் சௌந்தர்யா திருமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் வினோதினி மதுரை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வனிதா ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் ஆனால் பொதுமக்களுக்கு எந்தவித அதிகாரிகள் உத்தரவு உத்திரவாதம் அளிக்காததால் வலையன்குளம் சுற்று சாலையில் சாலை மறியல் செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!