17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் அரசு வழிகாட்டுதலுடன் தொடங்கிய பள்ளிகள்..

கீழக்கரையில் அரசு வழிகாட்டுதலுடன் தொடங்கிய பள்ளிகள்..

எழுதியவர்: ஆசிரியர் January 19, 2021, 4:05 pm

கொரோனா ஊரடங்கு தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இணைய தள வழியாக பாடங்கள் எடுக்கப்பட்டு வந்தது.  இந்நிலையில் தமிழக அரசு 10 மற்றும் 12ம் வகுப்புக்கு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்க உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் இன்று (19/01/2021) கீழக்கரையில் உள்ள அனைத்து பள்ளகளும் திறக்கப்பட்டன.  இது தொடர்பாக இஸ்லாமியா பள்ளி குழும தாளாளர் எம்.எம்.கே இபுராஹிம் கூறுகையில், “அரசு வழிகாட்டுதலின் படி பள்ளி வளாகம், வகுப்பறைகள், வாகனங்கள் அனைத்தும் முறையாக தொடர்ந்து கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.  அதே போல் வகுப்பறைகளும் முழுமையான சுகாதாரத்தை பேணும் வகையில் மேசைகள் தேவையான அளவு இடைவெளியிடனும், சுகாதாரத்துடனும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.  மேலும் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியரின் உடல்நிலையும் கண்காணிக்கப்படுகிறது” என்றார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!