ராமநாதபுரம் நகரில் எம்ஜிஆர்., பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பான பிரச்னையில் அதிமுக., முன்னாள் கவுன்சிலரும், எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணை செயலாளருமான வீரபாண்டியன் மீது நகர் அதிமுக., செயலாளர் அங்குச்சாமி உள்பட சிலர் பூட்டால் நேற்றிரவு தாக்கினர். இதில் காயமடைந்த வீரபாண்டியன் , தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வீரபாண்டியன் புகாரின் அடிப்படையில் விஜயராமகிருஷ்ணன், நகர் அதிமுக செயலாளர் அங்குச்சாமி உள்பட சிலர் மீது 4 பிரிவுகளின் கீழ் பஜார் காவல் சார்பு ஆய்வாளர் சகாயராணி வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வீரபாண்டியனிடம், அதிமுக மாவட்ட செயலர் எம்.ஏ.முனியசாமி, ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.மணிகண்டன் உள்ளிட்டோர் நலம் விசாரித்தனர்.
ராமநாதபுரம் அதிமுக., முன்னாள் கவுன்சிலர் மீது.நகர் அதிமுக செயலாளர் தாக்கு.
எழுதியவர்: mohan January 19, 2021, 2:34 pm




You must be logged in to post a comment.