17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை காமராஜ் பல்கலை தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றி வரும் சத்தியமூர்த்தி என்பவர்க்கு தமிழக அரசின் ‘தமிழ்ச் செம்மல்’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மதுரை காமராஜ் பல்கலை தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றி வரும் சத்தியமூர்த்தி என்பவர்க்கு தமிழக அரசின் ‘தமிழ்ச் செம்மல்’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

எழுதியவர்: mohan January 19, 2021, 11:18 am

தமிழ், தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் அறிஞர்கள், தமிழ் அமைப்பை ஏற்படுத்தி பிற நாடுகள், மாநிலங்களில் தமிழ் பண்பாடு, கலாசாரத்தை பாதுகாப்போருக்கு ஒவ்வொரு ஆண்டும் மாவட்டத்தில் ஒருவருக்கு தமிழக அரசு இவ்விருதை வழங்குகிறது.இவ்வகையில் 2020ம் ஆண்டிற்கு பேராசிரியர் சத்தியமூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், 45க்கும் மேல் தமிழ், இலக்கிய நுால்களை பதிப்பாக்கம் செய்துள்ளார். 10 தமிழ் ஆய்வு நுால்கள் எழுதியுள்ளார். 75க்கும் மேல் சர்வதேச, தேசிய கருத்தரங்குகளில் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார்.பல்கலை தமிழ்த்துறைக்கு பல்வேறு நாடுகளின் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் வருகை தந்தது, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக பல்வேறு நாடுகளுடன் ஏழு புரிந்துணர்வு (எம்.ஓ.யு.,) ஒப்பந்தங்கள் மேற்கொண்டது உள்ளிட்ட பணிக்காக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!