மதுரை மாநகர எஸ் எஸ் காலனி காவல் எல்லைக்குட்பட்ட துரைசாமி நகர் ஷாலினி தெருவில் வசித்து வருபவர் ஓய்வுபெற்ற தாசில்தார் ரவீந்திரன் 60 இவர் கடந்த 15ஆம் தேதி சம்பந்தி விருந்துக்காக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சென்றுள்ளார் இந்த நிலையில் நேற்று 1:30 மணியளவில் குடும்பத்தினர் வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கண்டு அதிர்ச்சி அடைந்தார் இதுகுறித்து மதுரை எஸ் எஸ் காலனி போலீசாருக்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் என்ன கொள்ளை அடிக்கப்பட்டது என விவரத்தை கேட்டு இருந்தனர் இதில் பீரோவில் வைத்து இருந்த 60 பவுன் தங்க நகைகள் வெள்ளிப் பாத்திரங்கள் பட்டுப் புடவைகள் ரூபாய் 20000 மற்றும் டபுள் பேரல் துப்பாக்கி (போலீஸ் உரிமம் பெற்றது) ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது கொள்ளை குறித்து வழக்குப்பதிவு செய்த எஸ் எஸ் காலனி போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை கொண்டு கொள்ளை கும்பலை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
ஓய்வு தாசில்தார் வீட்டில் தங்கம் வெள்ளி மற்றும் துப்பாக்கி கொள்ளை.
எழுதியவர்: mohan January 19, 2021, 10:08 am




You must be logged in to post a comment.