18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை ஜல்லிக்கட்டு காளைகளுடன் வந்து பொதுமக்கள் முற்றுகை.

உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை ஜல்லிக்கட்டு காளைகளுடன் வந்து பொதுமக்கள் முற்றுகை.

எழுதியவர்: mohan January 18, 2021, 5:57 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சியில் ஜல்லிக்கட்டு பார்வையாளர்கள் அமரும் கேலரி அமைக்க கோரி கிராம மக்கள் தேனி ரோட்டில் இருந்து ஊர்வலமாக  ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் மகாராஜா, பாரதிய பார்வர்ட் பிளாக் முருகன் ஜி தலைமையில் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை மேலும் வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமாருடன் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.. தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சி பொதுமக்கள்  மற்றும் இளைஞர்கள் ஜல்லிக்கட்டு காளைகளுடன்  ஊர்வலம் வந்து வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமாரை சந்தித்தனர் மேலும் வருவாய் கோட்டாட்சியர் மூன்று தினங்களுக்குள் ஜல்லிக்கட்டு பார்வையாளர் கேலரி அமைப்பதற்கான முடிவை அரசு அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!