18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாலை விபத்தில் உடைந்து கிடந்த கண்ணாடிகளை அகற்றிய போலீசார்; பொதுமக்கள் பாராட்டு..

சாலை விபத்தில் உடைந்து கிடந்த கண்ணாடிகளை அகற்றிய போலீசார்; பொதுமக்கள் பாராட்டு..

எழுதியவர்: mohan January 18, 2021, 11:00 am

சுரண்டை அருகே சாலை விபத்தில் உடைந்து கிடந்த கண்ணாடிகளை அகற்றிய போலீசாரை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர். தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள இலந்தைகுளம் கரையில் பைக் மீது தனியார் டூரிஸ்ட் பஸ் மோதிய விபத்தில் சுரண்டை அருகே உள்ள கோவிந்தபேரியை சேர்ந்த திராவிட தளபதி (25) என்பவர் படுகாயமடைந்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுரண்டை எஸ்ஐ ஜெயராஜ் தலைமையிலான போலீசார் காயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து போக்குவரத்தை சரிசெய்த போலீசார், விபத்தில் உடைந்து சிதறி கிடந்த கண்ணாடி சிதறல்களை அப்பகுதியில் செல்லும் வாகனங்களையும், வாகன ஓட்டிகளையும் பாதிக்காத வண்ணம் அகற்றினர்.சுரண்டை போலீசாரின் இந்த செயலை பொதுமக்கள் பாராட்டினர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!