இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூர் திமுக., சார்பில் தமிழர் திருநாளாம் தித்திக்கும் தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக., கொடியேற்று விழா இன்று (17/01/2021) மாலை நடந்தது. மண்டபம் பேருந்து நிறுத்தம் பகுதியில் திமுக., கொடியை பேரூர் செயலாளர் டி.ராஜா ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கினார். இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் கே.சம்பத்ராஜா, மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் என்.பூவேந்திரன், மாவட்ட பிரதிநிதி சாதிக்பாட்ஷா, நகர் துணை செயலாளர் எஸ். பகுர்தீன், மண்டபம் பேரூராட்சி முன்னாள் துணை சேர்மன் எம்.நம்புராஜன், மேலமைப்பு பிரதிநிதி தலைமை ஆசிரியர் (ஓய்வு) ராமமூர்த்தி, மண்டபம் பேரூராட்சி பணி நியமனக்குழு முன்னாள் உறுப்பினர் ஆர்.ராஜகோபால், சிறுபான்மை பிரிவு நல உரிமை மாவட்ட துணை அமைப்பாளர் இ.முபாரக் (பேரூராட்சி முன்னாள் உறுப்பினர்), ரயில்வே பாதுகாப்பு படை வீரர் (ஓய்வு) ஆனந்தகுமார் மூத்த நிர்வாகிகள் ஆர்.ஆறுமுகம், பி.பாண்டியன், ரயில் டிக்கெட் பரிசோதனை மூத்த ஆய்வாளர் (ஓய்வு) பி.காளிதாஸ், மாவட்ட மீனவரணி முன்னாள் துணை அமைப்பாளர் அயூப்கான், முன்னாள் ஒன்றிய பிரதிநிதி தில்லைநாயகம், தகவல் தொழில் நுட்ப அணி நகர் அமைப்பாளர் த.வெள்ளைச்சாமி, மாணவரணி நகர் செயலாளர் திரு.கோகுல் கிருஷ்ணன், வார்டு செயலர் கள் ரவி, கஜினி முகமது, இபுறாம் ஸா, நைஸ் கிங் டெய்லர் எஸ்.நாகராஜன், விசைப்படகு உரிமையாளர் என்.காளிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மண்டபத்தில் திமுக., சார்பில் பொங்கல் விழா .
எழுதியவர்: mohan January 18, 2021, 10:17 am




You must be logged in to post a comment.