17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சுரண்டை அருகே எலும்பு கூடாக காட்சியளிக்கும் மின் கம்பம்; பொதுமக்கள் அச்சம்…

சுரண்டை அருகே எலும்பு கூடாக காட்சியளிக்கும் மின் கம்பம்; பொதுமக்கள் அச்சம்…

எழுதியவர்: mohan January 18, 2021, 10:11 am

சுரண்டை அருகே உள்ள சாம்பவர் வடகரை பகுதியில் எலும்பு கூடாக காட்சியளிக்கும் மின் கம்பம் ஒடிந்து விழுந்து விபத்து ஏற்படுமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சாம்பவர் வடகரை 11-வது வார்டில் சித்திரை தோட்ட தெருவில் மின் கம்பம் ஒன்று உள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த பகுதியில் உள்ள இம் மின் கம்பம் கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு எலும்பு கூடாக காட்சியளிப்பதுடன் எப்போது ஒடிந்து விழுந்து ஆபத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சத்துடன் பொதுமக்கள் நடமாட வேண்டிய நிலை உள்ளது.ஏற்கனவே சமீபத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக இன்னும் இந்த மின்கம்பம் வலுவிழந்து காணப்படும் என்ற பயத்தில் பொதுமக்கள் உள்ளனர். ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!