18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அடிப்படை வசதிகள் மோசம்தி.மு.க., மக்கள் கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் புகார்.

அடிப்படை வசதிகள் மோசம்தி.மு.க., மக்கள் கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் புகார்.

எழுதியவர்: mohan January 17, 2021, 4:13 pm

மதுரை செல்லூரில் தி.மு.க., மக்கள் கிராம சபை கூட்டம் பொறுப்புக் குழு தலைவர் பொன். முத்துராமலிங்கம் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் பொறுப்புக் குழு உறுப்பினர்கள் பி.எஸ்ஸார். கோபி, தமிழரசி, வேலுச்சாமி, முகேஷ் சர்மா, பி.வி.எஸ். சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அவர்கள் பாதாள சாக்கடை, கழிவு நீர் பிரச்சனை அதிகம் உள்ளது. குடிநீர் முறையாக வருவதில்லை. ரேஷன் பொருட்கள் முறையாக வழங்குவதில்லை. சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது போன்ற பல்வேறு பிரச்சனைகளை தெரிவித்தனர். பொறுப்புக் குழு தலைவர் பொன் முத்துராமலிங்கம் பேசியதாவது: அதிகாரம் உள்ளவர்கள் மக்கள் பிரச்சனைகளை பற்றி சிந்திக்கவில்லை. பின் எதற்கு அவர்களுக்கு ஆட்சிப் பொறுப்பு. பொறுப்பற்ற அவர்களை அதிலிருந்து அகற்ற வரும் தேர்தலில் அ.தி.மு.க.வை மக்கள் நிராகரித்து தி.மு.க.,விற்கு வாக்களிக்க வேண்டும், என்றார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!