17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குப்பணம்பட்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு பெத்த கொண்ட ஓசிரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

குப்பணம்பட்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு பெத்த கொண்ட ஓசிரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

எழுதியவர்: mohan January 17, 2021, 12:02 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டி கிராமத்தில் இந்து குளாலருக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பெத்தகொண்ட ஓசிரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கோவிலில் கணபதிஹோமம் உள்ளிட்ட யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மங்கள இசை முழங்க கோவிலில் உள்ள கலசத்திற்கு புனிநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைதொடர்ந்து ஓசிரியம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஓசிரியம்மனுக்கு பல்வேறு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது. இதில் குப்பணம்பட்டியை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். கும்பாபிஷேக நிகழ்ச்சியில் அக்கா,தங்கையாக கலந்து கொண்டவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் குத்துவிளக்குகள் வழங்கப்பட்டன.மேலும் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!