17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேலூர் அருகே கோலிமருந்தை குடித்த ஒன்றரை வயது பெண் குழந்தை பலி.

மேலூர் அருகே கோலிமருந்தை குடித்த ஒன்றரை வயது பெண் குழந்தை பலி.

எழுதியவர்: mohan January 17, 2021, 11:12 am

மதுரை மாவட்டம்.. மேலூர் அருகே கோலி மருந்தை குடித்த ஒன்றரை வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி உரக்க பட்டியை சேர்ந்தவர் ரத்தினம் இவரது மனைவி செல்வி .கீழவளவில் உள்ள மாதவன் மற்றும் முருகன் பாண்டிக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களுக்கு சுபாஷினி என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று கோழிப்பண்ணையில் வேலை செய்து கொண்டிருக்கும்போது ஒன்றரைவயதுபெண் குழந்தை சுபாஷினி கோழி வைத்திருந்த மருந்தை எடுத்து குடித்துவிட்டார் . இதனால்மயங்கி ஆபத்தான நிலையில் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் பெண் குழந்தை சுபாஷினி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்தசம்பவம் குறித்து குழந்தையின் அம்மா செல்வி கொடுத்த புகாரின் பேரில் கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!