17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெத்தானியாபுரத்தில் நீண்டநாள் நோயால் அவதிப்பட்ட வாலிபர் விஷம் குடித்து தற்கொலை.

பெத்தானியாபுரத்தில் நீண்டநாள் நோயால் அவதிப்பட்ட வாலிபர் விஷம் குடித்து தற்கொலை.

எழுதியவர்: mohan January 17, 2021, 11:09 am

மதுரை பெத்தானியாபுரத்தில் நீண்ட நாள் நோயால் அவதிப்பட்டு வந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.பெத்தானியாபுரம் ஐஎன்டியூசி காலனி 3வது தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி மகன் சார்லஸ் 23. இவர் நீண்ட நாட்களாக நோய்வாய் பட்டிருந்தார். அதற்கான சிகிச்சை பெற்றும் குணம் அடையவில்லை .இதனால் மனமுடைந்து காணப்பட்ட சார்லஸ் வீட்டில் விஷம் அருந்தி மயங்கி கிடந்தார். ஆபத்தான நிலையில் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் சார்லஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.இவரது சாவு குறித்து கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!