ராமேஸ்வரம் தீவு பகுதியில் தங்கச்சிமடத்தில் சகதிக்காடான சாலைகளை செப்பனிடாத ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து சாலைகளில் மரக்கன்று நட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் சாலைகள் கடந்த பல ஆண்டுகளாக சாலைகள் குண்டும் குழியுமாகி மக்கள் பயன்பாட்டிற்கு உதவாத வகையில் உள்ளது. தற்போது பெய்து வரும் தொடர் மழையால் குண்டும் குழியுமான சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து மிகவும் பாதித்துள்ளது.இச்சாலைகளை ஊராட்சி நிர்வாகம் இச்சாலைகளுக்கு மாற்றாக புதிய சாலைகள் அமைக்க வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டம் நடத்தியும் நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சமயன்நகர் சாலைகளில் வாழை, பலா, மா உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாலுகா குழு உறுப்பினர் வி.பழனிகுமார் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கிளை செயலாளர் என் அகிலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருணாகரன், மாவட்ட குழு உறுப்பினர் இ. ஜஸ்டின், தமிழ்நாடு மீன்பிடி தொழிலாளர் கூட்டமைப்பு மாவட்ட செயலர் எம்.கருணாமூர்த்தி, தாலுகா செயர் சிவா, தாலுகா குழு உறுப்பினர்கள் ஏ.அசோக், மணிகண்டன், உட்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
தங்கச்சிமடத்தில் சாலைகளை செப்பனிடக்கோரி மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மரக்கன்று நட்டு நூதன போராட்டம் .
எழுதியவர்: mohan January 17, 2021, 10:25 am




You must be logged in to post a comment.