18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை ஒன்றியத்தில் ரூபாய் 14 லட்சம் மதிப்பில் நாடக மேடை திறப்பு விழா

நிலக்கோட்டை ஒன்றியத்தில் ரூபாய் 14 லட்சம் மதிப்பில் நாடக மேடை திறப்பு விழா

எழுதியவர்: mohan January 15, 2021, 12:35 pm

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முசுவனூத்து ஊராட்சியில் உள்ள என். ஆண்டிபட்டி, கல்கோட்டை ஆகிய கிராமங்களில் உள்ள பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கிராம மக்கள் மக்கள் பயன்படும் விதமாக நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து தலா 7 லட்சம் வீதம் 2 கிராமங்களின் நாடகமேடை கட்டப்பட்டு திறப்பு விழா நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தேன்மொழிசேகர் தலைமை தாங்கி திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.முசுவனூத்து ஊராட்சி மன்ற தலைவர் ஜெயப்பிரகாஷ் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் யாகப்பன், மேற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, அம்மையநாயக்கனூர் நகரச் செயலாளர் தண்டபாணி, நிலக்கோட்டை நகரச் செயலாளர் சேகர், நிலக்கோட்டை கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற செயலாளர் முகமது லத்தீப், உள்பட பலர் கலந்து கொண்டனர். நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!