17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பொங்கல் கொண்டாடிய ஆதரவற்ற குழந்தைகள் .

பொங்கல் கொண்டாடிய ஆதரவற்ற குழந்தைகள் .

எழுதியவர்: mohan January 13, 2021, 11:22 am

மதுரையில் பல்வேறு அமைப்புகளின் உதவியோடு ஆதரவற்ற குழந்தைகள் தங்களது பொங்கல் திருநாளை பல்வேறு பரிசு பொருட்களுடன் இன்று கொண்டாடி மகிழ்ந்தனர்.மதுரை கேகே நகரில் உள்ள கிருஷ்ணய்யர் சமுதாயக் கூடத்தில் இன்று ஆதரவற்ற குழந்தைகளுக்கான பொங்கல் கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது. இதில் மதுரை மாநகர துணை ஆணையர் சிவபிரசாத் கலந்து கொண்டு குழந்தைகளிடையே உரையாடி மகிழ்ந்தார்.ஒளி என்ற அமைப்பின் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கலை ஒட்டி மதுரையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் மாணவ மாணவியருக்கு பரிசுப் பொருட்கள் புத்தாடை வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.இதுகுறித்து அந்த அமைப்பின் நிர்வாகிகளில் ஒருவரான லக்ஷன் வைத்தியம் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆதரவற்ற குழந்தைகளுக்காக ஒளி அமைப்பின் சார்பில் பொங்கல் திருநாளை கொண்டாடி வருகிறோம் கடந்தாண்டு 113 குழந்தைகளும் இந்த ஆண்டு 225 குழந்தைகளும் இதனால் பயனடைந்துள்ளனர் இந்த நிகழ்ச்சிக்கு மதுரை காவல்துறையின் சார்பில் ஒத்துழைப்பு அளிக்கப்படுகிறது. புத்தாடைகள் மட்டுமன்றி நோட்டு புத்தகங்கள் டிக்சனரிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மதுரை ரவுண்ட் டேபிள் 14, மதுரையில் லேடிஸ் சர்க்கிள் 8 ஆகியவை இணைந்து இந்த விழாவை போராட்டம் நடத்தி வருகின்றன என்றார்.பின்னர் குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!