18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி நான்கு வழிச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்;திமுக செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்…

தென்காசி நான்கு வழிச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்;திமுக செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்…

எழுதியவர்: mohan January 12, 2021, 11:27 am

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் பாவூர்சத்திரத்தில் நடந்தது. இதில், தென்காசி-நெல்லை நான்கு வழிச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது. மாநில விவசாய அணி துணை செயலாளர் கு.செல்லப்பா தலைமை வகித்தார்.மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நடராஜன், ஜெயக்குமார், சண்முகையா, பொதிகை சில்ஸ் மகபூப் மீரான், சுப்பிரமணியன், மாரிமுத்து, ராஜதுரை, மேகநாதன், கண்ணன், ஜேசுராஜன், சமுத்திர பாண்டி, ரவீந்திர கண்ணன் முன்னிலை வகித்தனர். கீழப்பாவூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் கல்லூரணி சீனித்துரை வரவேற்றார். மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் சிவபத்மநாதன், பூங்கோதை எம்எல்ஏ ஆகியோர் சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில், கிடப்பில் போடப்பட்ட தென்காசி- நெல்லை நான்கு வழிச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும். ராமநதி ஜம்புநதி மேல்நிலை கால்வாய் திட்டப் பணியை விரைந்து முடிக்க வேண்டும். தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள திருமண உதவித்தொகை மற்றும் இறந்த நபர்களின் அடக்க செலவுக்கு வழங்கப்படும் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். தைப் பொங்கலை முன்னிட்டு அனைத்து பகுதிகளிலும் கட்சி கொடியேற்றி விளையாட்டு போட்டிகள் நடத்துவது. தென்காசி தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட 3 தொகுதிகளிலும் தலைவர் ஸ்டாலின் அறிவிக்கும் வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர் எழில்வாணன், ஒன்றியச் செயலாளர்கள் சிவன் பாண்டியன், கடற்கரை, ராஜா, கிறிஸ்டோபர், சேர்மத்துரை, செல்லத்துரை, அன்பழகன், அழகுசுந்தரம், செல்லத்துரை, மாரி வண்ணமுத்து, குமார், நகரச் செயலாளர்கள் சாதிர், சங்கரன், பேரூர் செயலாளர்கள் மந்திரம், சுடலை, முத்தையா, ஜெயபாலன், ஜெகதீசன், மாரியப்பன், நெல்சன், பவுல், லட்சுமணன், பொன் சுந்தரம், அணி அமைப்பாளர்கள் ரவிச்சந்திரன், சுப்பையா, கோமதிநாயகம், சேக் முகமது, புனிதா மகேஸ்குமார், சரவணன், குட்டி, சங்கரநயினார், வைத்தீஸ்வரி மற்றும் சாக்ரடீஸ், கபில், செல்வன், விஜயன், வைரசாமி, காந்திராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்று கருத்துக்களை பதிவு செய்தனர்.கூட்டத்தின் இறுதியில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ராஜா நன்றி கூறினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!