18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு தம்பியை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி தீக்குளிக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு.

நிலக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு தம்பியை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி தீக்குளிக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு.

எழுதியவர்: mohan January 12, 2021, 11:19 am

திண்டுக்கல் மாவட்டம்,, நிலக்கோட்டை அருகே பச்ச மலையான்கோட்டை ஊராட்சியில் உள்ள சுக்லாபுரத்தைச் சேர்ந்த முத்து மகன் மணியரசன் வயது 29. இவரை ஜல்லிபட்டி பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் , மகேஸ்வரன், சஞ்சீவி உள்பட ஒரு கும்பல் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடுப்பட்டி பகுதியில் காரில் கடத்திச் சென்று பட்டா கத்தி போன்ற ஆயுதங்களால் கடுமையாக தாக்கியதால் படுகாயத்துடன் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று தருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செம்பட்டி போலீஸ் நிலையத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் கடந்த 2 தினங்களுக்கு முன்பு நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து செம்பட்டி போலீசார் ஜல்லிபட்டி பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் ,மகேஸ்வரன், சிரஞ்சீவி உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திடீரென நேற்று 11.01.2021 மாலை சுமார் 5 மணி அளவில் மணியரசனின் அண்ணன் காசிநாதன் என்பவர் நிலக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு தம்பி மணி அரசனை தாக்கியவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க கோரியும் காரில் கடத்தி கொலை முயற்சி செய்த உரிய வழக்கு போட கோரியும் மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்த போலீசார் காசிநாதன் தீக்குளிக்க முயற்சி செய்வதை தடுத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி இதுபோன்ற விபரீதமான முடிவுகளை எடுக்க கூடாது என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!