திருவண்ணாமலை மாவட்டத்தில் காளை விடும் விழாவுக்கு தடை போலீசார் தடை விதித்து, எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்துக்கு உட்பட்ட ஆதமங்கலம் புதூர், கேட்டவரம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், கடலாடி, கீழ்பாலூர், மட்டவெட்டு, பட்டியந்தல் கிராமங்களில், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையில், நான்கு நாட்கள் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு, மார்கழி மாத பிறப்பு ஆகிய நாட்களில், காளை விடும் விழா நடப்பது வழக்கம். இதில், 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும். திருவண்ணாமலை மாவட்டத்தில், காளை விடும் விழாவுக்கு, அரசு அனுமதி அளிப்பதில்லை. எனினும், தடையை மீறி, கடந்த சில ஆண்டுகளாக, காளை விடும் விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று, கலசப்பாக்கத்தை சேர்ந்த, கிராம பஞ்., தலைவர்களை அழைத்து, கடலாடி போலீசார், ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில், பொங்கல் பண்டிகையில், காளை விடும் விழா நடத்த, அரசு தடை விதித்துள்ளதையும், அதை மீறுவோர் மீது, வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும், போலீசார் எச்சரித்தனர்.
காளை விடும் விழாவுக்கு தடை.
எழுதியவர்: mohan January 11, 2021, 2:24 pm




You must be logged in to post a comment.