17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குப்பணம்பட்டி கிராமத்தில் தொடர்மழையால் தெருவில் தேங்கியுள்ள சகதியில் கரும்பு நட்டு வைத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குப்பணம்பட்டி கிராமத்தில் தொடர்மழையால் தெருவில் தேங்கியுள்ள சகதியில் கரும்பு நட்டு வைத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எழுதியவர்: mohan January 9, 2021, 11:41 am

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குப்பணம்பட்டி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10நாட்களுக்கு மேலாக பெங்து வரும் மிதமான மழையால் இந்த கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும் தெருக்களுக்கு சிமின்ட் சாலை வசதி இல்லாததால் தெருக்கள் அனைத்தும் சேரும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இந்த நிலைமை கடந்த 2வருடங்களாக நீட்டித்து வருவதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெருவில் சாலை வசதி அமைத்து தரக்கோரி பல முறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் ஊர் முன்பு தேங்கியுள்ள மழைநீரிலும், சகதியிலும் கரும்பு பயிரை நட்டு வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உடனடியாக மாவட்ட நிர்வாகம் தேங்கியுள்ள மழைநீரை அகற்றவும், சிமின்ட் சாலை வசதி அமைத்து தர நடவடிக்கை எடுக்கவும் கோரி;க்கை விடுத்தனர்.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!