17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு .

ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு .

எழுதியவர்: mohan January 8, 2021, 12:09 pm

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சம்சிகபுரம் வாகைகுளம் பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் வயது 36 ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார் இவர் இன்று இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே ஆட்டோவை ஓட்டி சென்ற பொழுது மதுரையிலிருந்து இராஜபாளையம் வந்து போடி செல்லக்கூடிய அரசு பேருந்து முன்பு சென்ற ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஆட்டோ டிரைவர் பாலசுப்பிரமணியம் நெற்றியில் பலத்த காயமடைந்து இராஜபாளையம் PACR அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைத்துள்ளனர் மதுரைக்கு கொண்டு செல்லும் வழியில் திருமங்கலம் அருகே மயக்கமடைந்து நிலையில் உடனடியாக ஆம்புலன்ஸ் ஓட்டுனர் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதா மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்இந்த விபத்து குறித்து இராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!