18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பல மாதங்களாக எரியாத ஹைமாஸ் விளக்கு இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் தொழிலாளிகள் அவதி .

பல மாதங்களாக எரியாத ஹைமாஸ் விளக்கு இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் தொழிலாளிகள் அவதி .

எழுதியவர்: mohan January 8, 2021, 11:22 am

திருப்பரங்குன்றம் அருகில் உள்ளது கூத்தியார்குண்டு கிராமம் இங்கு கன்னியாகுமரி பெங்களூரு நான்கு வழிச்சாலை சந்திப்பு உள்ளது. இந்த சாலை சந்திப்பில் இருந்து மேற்கு பகுதியில் எய்மஸ் மருத்துவமனை அமையவுள்ள சாலை இணைப்பும் கிழக்கில் கப்பலூர்,கருவேலம்பட்டி ஆகிய கிராமங்களுக்கு செல்லும் சாலையும் உள்ளது. இந்த சாலை சந்திப்பின் வழியாக தினமும் பல ஆயிரக்கணக்கான வகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக இரு சக்கர வாகனங்கள் அதிகளவில் சாலையை கடந்து செல்கின்றன. மேலும் இப்பகுதியில் உள்ள சிப்காட்டில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் இந்த சாலையை கடந்து தான் சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு லாரி மோதியதில் இந்த சந்திப்பில் இருந்த ஹைமாஸ் விளக்கு சேதமடைந்தது. இதனைத்தொடர்ந்து ஹைமாஸ் விளக்கு இல்லாத்தால் இப்பகுதியில் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் இந்த இடத்தில் மீண்டும் ஹைமாஸ் விளக்கு அமைக்க நெடுஞ்சாலை துறையில் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை எனவும் எனவே உடனடியாக இப்பகுதியில் ஹைமாஸ் விளக்கு அமைத்து தர இப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!