17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அடிப்படை வசதிகளின்றி வாழ்வதாக கூறி தமிழ்புலிகள் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை.

அடிப்படை வசதிகளின்றி வாழ்வதாக கூறி தமிழ்புலிகள் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை.

எழுதியவர்: mohan January 7, 2021, 1:35 pm

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகேயுள்ள ராஜாக்கள்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மறவப்பட்டி காலனி பகுதியில் 100க்கும் மேற்பட்ட அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த குடும்பத்தினர் வாழ்ந்துவருகின்றனர். இந்நிலையில் கடந்த 30ஆண்டுகளுக்கு மேலாக அக்கிராமத்தில் குடிநீர், சாலை, கழிப்பிடம் மற்றும் மயானம் ஆகிய எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி வாழ்ந்துவரும் சூழலில் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் கண்டுகொள்ளாத நிலையில் இன்று மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியபோக்கை கண்டித்து தமிழ்புலிகள் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் கிராம மக்களுடன் வந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட நிர்வாகத்திற்கு கண்டித்து கோஷங்களை எழுப்பினர். 100குடும்பத்தினர் உரிய வீடின்றி வாழ்ந்துவருவதால் அரசு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!