17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொட்டும் மழையிலும் விவசாயிகளுக்காக ஆர்ப்பாட்டம்.

கொட்டும் மழையிலும் விவசாயிகளுக்காக ஆர்ப்பாட்டம்.

எழுதியவர்: mohan January 4, 2021, 3:22 pm

கொட்டும் மழையிலும் விவசாயிகளுக்காக ஆர்ப்பாட்டம் இந்தியாவின் முது கெலும்பான விவசாயிகளின் வாழ்க்கையைக் கேள்வி குறியாக்கும் வகையில் விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை மோடி தலைமையிலான ஆளும் பாஜக அரசு கொண்டுவந்துள்ளது. இதை திரும்ப பெற வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை மத்திய தொகுதி சார்பில் திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் கொட்டும் மழையில் நடைபெற்றது..போராட்டத்திற்கு தொகுதி செயலாளர் அபுதாகிர் தலைமை வகித்தார்.. சிறப்பு அழைப்பாளராகமாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது, கலந்து கொண்டார்.திருப்பரங்குன்றம் கிளை தலைவர் கலீல் செயலாளர் ஷகாவத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்..போராட்டத்தில் மத்திய அரசே! விவசாயிகளை வாழ விடு வேளாண் சட்டத்தை கைவிடு!போராடும் விவசாயிகளை நசுக்காதே விவசாயிகளை கார்ப்பரேட்களிடம் விற்கதேவேளாண் சட்டத்தை ரத்து செய் என கோஷமிட்டனர்.. மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீத் தரையில் உட்கார்ந்து கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!