18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » 10,12ம் வகுப்பு மாணவ மாணவியருக்கு பரிசளிப்பு விழா

10,12ம் வகுப்பு மாணவ மாணவியருக்கு பரிசளிப்பு விழா

எழுதியவர்: mohan January 3, 2021, 10:15 am

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள சர்ச் தெருவில் பத்தாம் வகுப்பு மாணவ மாணவியருக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது ‌.ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள சர்ச் தெருவில் இளைஞர் சங்கம் சார்பில் ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டுபத்தாம் வகுப்பு ,பதினொன்றாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவியருக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராஜபாளையம் நகர் காவல் துணை கண்காணிப்பாளர் நாங்க சங்கர் தலைமை வகித்து பரிசு வழங்கி பாராட்டினார். பின்னர் ஏழை எளிய முதியோர் 30 பெண்களுக்கு சேலை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ்,மற்றும் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வக்கீல் துரை முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை சர்ச் தெரு இளைஞரணியினர் செய்திருந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!