18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நாங்கள் நல்ல திட்டங்களுடன், நேர்மையுடன் உங்களை அணுகுகிறோம். இந்த வார்த்தையை உபயோகிக்க கூட அவர்கள் யோசிப்பார்கள் -கமலஹாசன்

நாங்கள் நல்ல திட்டங்களுடன், நேர்மையுடன் உங்களை அணுகுகிறோம். இந்த வார்த்தையை உபயோகிக்க கூட அவர்கள் யோசிப்பார்கள் -கமலஹாசன்

எழுதியவர்: mohan December 31, 2020, 1:11 pm

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பேசும் போது, செல்லுமிடம் எல்லாம் இந்த அன்பு பொங்கி வழிகிறது இதை நான் செய்த பாக்கியம். மாற்றத்திற்கு நீங்கள் தயாராகி விட்டீர்கள் என்பது இந்த கூட்டம் உறுதிப்படுத்துகிறது. தமிழகத்திற்கான மாற்றத்தை நீங்கள் ஏற்படுத்த தயாராகி விட்டீர்கள் அதை செய்துகாட்டுவோம். மக்களின் ஆட்சி மலர வேண்டுமென்றால் நீங்கள் மக்கள் நிதி மையத்தின் கையை வலுப்படுத்த வேண்டும் அதற்கான தடயங்கள் எல்லாம் எங்களுக்கு செல்லும் வழியெல்லாம் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. நாங்கள் நல்ல திட்டங்களுடன், நேர்மையுடன் உங்களை அணுகுகிறோம். இந்த வார்த்தையை உபயோகிக்க கூட அவர்கள் யோசிப்பார்கள் . நேர்மை என்பது தான் எங்கள் பலம் அது நமது பலமாக மாற வேண்டும் என்பது என் ஆசை. உங்கள் ஓட்டு என்பதுதான் உங்கள் உரிமை அதை கடமை என்றும் நினைத்து நீங்கள் செய்தாக வேண்டும் அப்படி செய்தால் நேர்மையை நோக்கி நீங்களும் நடை போட்டால் நாளை நமதே வெற்றியும் நமதே என கமல்ஹாசன் பேசினார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!