17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கரிசல்குளம் ஊராட்சி மன்ற அலுவலக கூட்டத்தை6 வார்டு உறுப்பினர்கள் புறக்கணித்து தர்ணா போராட்டம்.

கரிசல்குளம் ஊராட்சி மன்ற அலுவலக கூட்டத்தை6 வார்டு உறுப்பினர்கள் புறக்கணித்து தர்ணா போராட்டம்.

எழுதியவர்: mohan December 31, 2020, 12:00 pm

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகேமேலப்பாட்டம் கரிசல்குளம் ஊராட்சி மன்ற அலுவலக கூட்டம் தலைவர் லட்சுமி தலைமையில் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் பங்கேற்ற வார்டு உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் கூறப்படும் வேலைகள் மற்றும் உறுப்பினர்களின் கோரிக்கைகள் எதுவும் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி கண்டு கொள்வதில்லை மேலும் அவரது கணவர் அழகாபுரியான் தலையீடு செய்து பல வேலைகளை தடை செய்வதாகவும் மேலும் கிளர்க் பணிக்கு பல ஆண்டுகளாக பூர்த்தி செய்யாமல் அந்த இடத்தில் ஓய்வு பெற்ற ஒருவரை வைத்து வேலைகளை செய்து வருவதாகவும் இதை கேட்டால் எங்களை வெளியே பேக சொல்வதாகவும் குற்றம் சாட்டினர்இந்த செயலை கண்டித்து 1 வார்டு உறுப்பினர் திருமுருகன் ,4 வார்டு மல்லிகா , 7வது வார்டு விஜி. 8 வார்டு ஜெயந்தி , 10 வார்டு வனலட்சுமி 11வது வார்டு சிவசக்தி உள்ளிட்ட 6 வார்டு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் ஊரகவளர்ச்சி அலுவலரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!