18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் பல்வேறு இடங்களில்கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது.போலீஸ் அதிரடி.

மதுரையில் பல்வேறு இடங்களில்கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது.போலீஸ் அதிரடி.

எழுதியவர்: mohan December 31, 2020, 10:22 am

மதுரையில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மதுரைதிலகர் திடல் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பேச்சியம்மன் படித்துறை அருகே அக்கரகாரம் அருகே கஞ்சா விற்பனை செய்த மீனாட்சி சுந்தரம்20 என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவையும் அவர் விற்பனைக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர் .கூடல் நகர் போலீசார் நடத்திய சோதனையில் கூடல் நகர் ரயிலார் நகர் பாலத்தின் அடியில் விற்பனை செய்த ஆரப்பாளையத்தை சேர்ந்த மீனா 58 எம்.கே.புரத்தைசேர்ந்த விஜய் 27  அதே பகுதியைசேர்ந்த சதீஷ் ராஜா என்ற நந்தகுமார் 27 இவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவையும்விற்பனை செய்த பணம் ரூபாய் முன்னூரையும் கூடல்புதூர் போலீசார் பறிமுதல் செய்தனர் .அண்ணாநகர் போலீசார் மீன் மார்க்கெட் அருகே விற்பனை செய்த வண்டியூரை சேர்ந்த அருண்பிரகாஷ் 22 என்பவரையும் கைது செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!