17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வில்லாபுரத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை தொழிலாளர் ஓய்வூதியர் சங்கம் சார்பில் 5 வது மாநில மாநாடு

வில்லாபுரத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை தொழிலாளர் ஓய்வூதியர் சங்கம் சார்பில் 5 வது மாநில மாநாடு

எழுதியவர்: mohan December 30, 2020, 2:16 pm

திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை தொழிலாளர் ஓய்வூதியர் சங்கம் சார்பில் 5 வது மாநில மாநாடு நடைபெற்றது .இதில் மாநில தலைவர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார்.பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பரமேஸ்வரன் வரவேற்புகூறினர்.மாநில பொருளாளர் ஜெயச்சந்திரன் நிதிநிலை அறிக்கை வாசித்தார் .விழாவில் சிறப்பு விருந்தினராக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் எம்பி கலந்து கொண்டார்.கூட்டத்தில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரியும் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரியும் .சத்துணவு அங்கன்வாடி வனத்துறை ஊழியர் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்த பட்ச ஊதியமாக 7200 வழங்க கோரிக்கைஜாக்டோ-ஜியோ போராட்டங்களில் கலந்து கொண்ட அரசு ஊழியர் ஆசிரியர் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறக்கோரி உள்ளிட்ட 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!