திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் துக்காப்பேட்டை அங்கன்வாடி மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மக்கள் கையெழுத்து இயக்கம் மற்றும் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தை கல்வி கற்போம் வலியுறுத்தி விழிப்புணர்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ஒருங்கிணைந்த
குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் மீனாம்பிகை தலைமை தாங்கினார். குப்பம்மாள், முத்துலட்சுமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மீனாம்பிகை தலைமையில் நடைபெற்றது. குப்பம்மாள், முத்துலட்சுமி, பிரீத்தா, லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பாக நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் அரசு ஊழியர்கள், பொதுமக்கள், அனைத்து தரப்பு மக்கள் கையெழுத்திட்டனர். பின்னர் குழந்தைகள் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளை கல்வி கற்போம் குறித்து விழிப்புணர்வு எடுத்துரைக்கப்பட்டது. செங்கம் பகுதிகளைச் சார்ந்த அங்கன்வாடி பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் முடிவில் துக்காப்பேட்டை அங்கன்வாடி மைய பொறுப்பாளர் தஹஜிம் பானு நன்றி கூறினார்.
குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் மக்கள் கையெழுத்து இயக்கம்,
எழுதியவர்: mohan December 30, 2020, 1:54 pm




You must be logged in to post a comment.