17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்.

நிலக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்.

எழுதியவர்: mohan December 29, 2020, 5:30 pm

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக திரண்டு ஒன்றியச் செயலாளர் சசிகுமார் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்றும் அரசு வழங்கும் அனைத்து சலுகைகளும் உரிய காலத்தில் வழங்க வேண்டும் என்றும் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் மாற்றுத்திறனாளிகள் குடியிருக்கும் மற்றும் இலவச வீட்டுமனை பட்டா கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!