18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சுரண்டையில் காங்கிரஸ் கட்சியின் 136-வது ஆண்டு விழா; இனிப்பு வழங்கி உறுதி மொழியேற்று உற்சாக கொண்டாட்டம்…

சுரண்டையில் காங்கிரஸ் கட்சியின் 136-வது ஆண்டு விழா; இனிப்பு வழங்கி உறுதி மொழியேற்று உற்சாக கொண்டாட்டம்…

எழுதியவர்: mohan December 28, 2020, 3:59 pm

தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் காங்கிரஸ் கட்சியின் 136-வது ஆண்டு விழா மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ் பழனி நாடார் தலைமையில் இனிப்பு வழங்கி உறுதிமொழி எடுத்து கொண்டாடப்பட்டது.மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ் பழனி நாடார் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள் கதர் குல்லா அணிந்து காங்கிரஸ் கொடியுடன் ஊர்வலமாக வந்து கொடியேற்றி இனிப்பு வழங்கினர்.

முன்னதாக மறைந்த தேசிய தலைவர்கள் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் நகர தலைவர் எஸ்கேடி ஜெயபால், மாவட்ட துணை தலைவர் பால் (எ) சண்முகம், மேலநீலீதநல்லூர் வட்டார தலைவர் முருகையா, மாவட்ட பொதுச்செயலாளர் தென்காசி கணேசன், மாவட்ட செயலாளர் சேர்மசெல்வம், சேர்மன் அருணாசலம், சகோதரி, சண்முகசுந்தரம், நாட்டாமை ராமராஜ், தெய்வேந்திரன், சோனியா பேரவை பிரபாகர், ஊடகப்பிரிவு சிங்கராஜ், ஆறுமுக நாடார், சமுத்திரம், பொய்கை ஜெகநாதன், கந்தையா, செல்வன், ராஜேந்திரன், அருணாசலக்கனி, மணிகண்டன், சண்முகவேல், சவுந்தர், சமுத்திராண்டி, பிரபு, சங்கர், அமுதா சந்திரன், மாரி கிருஷ்ணன், பொன்னுக்காளை, காந்தி, ரமேஷ், தர்மராஜ், டுவின்ஸ் கோபால், முருகேசன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!