17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செல்லம்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செல்லம்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எழுதியவர்: mohan December 28, 2020, 1:09 pm

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் விவசாய சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த 30நாட்களுக்கு மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் உள்ள யூனியன் அலுவலகம் முன்பு டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஏராளமான விவசாயிகள் கன்டண ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.முண்டுவேலம்பட்டி கிராமமக்கள் சாா்பில் நடத்திய இந்த ஆா்ப்பாட்டத்தில் விவசாயிகள் மத்திய அரசு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினரும் பங்கேற்றனர்.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!