18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராஜபாளையம் பஞ்சு மார்க்கெட்டை அருகே அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் விபத்து

இராஜபாளையம் பஞ்சு மார்க்கெட்டை அருகே அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் விபத்து

எழுதியவர்: mohan December 28, 2020, 10:36 am

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் அருகே பெட்ரோல் பங்க் எதிரில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து இராஜபாளையம் நோக்கி வந்த அரசுப் பேருந்தும் திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூர் செல்லும் சொகுசு காரும் நேருக்கு நேர் மோதி விபத்துதிருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூருக்கு செல்வதற்காக சொகுசு காரில் 4 பேர் வந்துள்ளனர் இந்த காரை சுஜி ஓட்டி வந்துள்ளார் அதுசமயம் ஸ்ரீவில்லிபுத்தூரில்இருந்து இராஜபாளையத்திற்குபயணிகளை ஏற்றி வந்த சிட்டி பஸ்சும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் காரில் இருந்தவர்களுக்கும் காயங்கள் இல்லாமல் உயிர் தப்பித்தனர் இப்பகுதி வளைவு பகுதியாக இருப்பதால் காரும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி உள்ளதுஇந்த இடத்தில் ஒரு பேரிக்காடு அல்லது ஒரு வேகத்தடை அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளதுஇந்த விபத்து குறித்து இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!