18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் மழைநீர் தேங்கும் இடங்கள் சீரமைக்கும் பணிகள் தொடக்கம் ……

கீழக்கரையில் மழைநீர் தேங்கும் இடங்கள் சீரமைக்கும் பணிகள் தொடக்கம் ……

எழுதியவர்: ஆசிரியர் December 27, 2020, 1:10 am

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மழை பெய்தால் பல இடங்களில் மழைநீர் செல்ல வழியில்லாமல் தேங்கிக் கிடக்கும் அவலநிலை உள்ளது. அதில் குறிப்பாக கீழக்கரை முக்கிய சாலையான வள்ளல் சீதக்காதி சாலையில் புதிய பேருந்து நிலையம் செல்லும் வழியில் கிராம அலுவல் அதிகாரிகள் அலுவலகம் அருகிலும், புதிய பேருந்து நிலையம் பின்புறமும் மழை பெய்தால் தண்ணீர் வெளியே செல்ல முடியாமல் அந்த இடத்திலேயே தேங்கும் நிலையில் இருந்தது.

அதை சரி செய்யும் விதமாக இன்று (26/12/2020) கீழக்கரை நகராட்சி சார்பில் விஏஓ அலுவலகம் அருகிலும், புதிய பேருந்து நிலையம் பின் புறமும் சாலையில் காங்கிரட் சாலை போட்டு சமப்படுத்தும் பணி நடைபெற்றது. இப்பணியை கீழக்கரை நகராட்சி தலைமை பொறியாளர் முஹம்மது மீரான் மற்றும் அலுவலர்கள் பார்வையிட்டனர்

கீழை நியூஸ் S.K.V முகம்மது ஹாஜா சுஐபு
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!