சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் பகுதியில் உள்ள கேஸ் ஏஜென்சியில் சிலிண்டரைப் பழுது பார்க்கும் போது அது திடீரெனத் தீப்பற்றி வெடித்துச் சிதறியதில் மூவர் காயமடைந்தனர். தென்காசி மாவட்டம் திருவேங்கடம் என்ஜிஓ காலனி பகுதியில் சமையல் கேஸ் ஏஜென்சி உள்ளது.இங்கு சிலிண்டர் வினியோகம் செய்யும் பணியில் ஊழியர்கள் பசுபதி பாண்டியன் மற்றும் காளி ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் கம்மாபட்டியை சேர்ந்த மாரியம்மாள் என்பவர் தனது வீட்டில் கொடுக்கப்பட்டுள்ள சிலிண்டரில் காஸ் கசிவு உள்ளதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அங்கு சென்ற பசுபதி பாண்டி சிலிண்டரை அங்கிருந்து எடுத்து வந்து பசுபதி பாண்டியன், காளி ஆகியோர் அந்த சிலிண்டரை பழுது பார்த்தனர். அப்போது எதிர்பாராத வகையில் கேஸ் கசிவு ஏற்பட்டு சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. இதில் அங்கிருந்த 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த திருவேங்கடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
சங்கரன்கோவில் அருகே சமையல் சிலிண்டர் தீப்பற்றி விபத்து;மூவர் காயம்..
எழுதியவர்: mohan December 26, 2020, 4:03 pm




You must be logged in to post a comment.